அத்லெட்ஸ், ஆன் யுவர் மார்க்ஸ் ! . . .

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; 
ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா?
 நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 
1 கொரி 9:24

இந்தப் பூமியில் வந்து செல்வோர் ஏராளம்; வாழ்ந்து செல்வோர் குறைவு.
 வாழும் நாட்கள் அல்ல, வாழ்ந்த வாழ்க்கையே அதற்கு சான்று. 
தடகள அரங்கினுள் ஆயிரம் பேர்  வந்தாலும், மின்னலாய்
 ஓடி ஜெயிக்கும் உசேன் போல்ட்க்கே தங்கப்பதக்கம்.

வெறுமனே கும்பலோடு ஓடாமல், குறிக்கப்பட்ட இலக்கிற்காக 
துரிதமாக ஓடுவோம். முயற்சியும், பயிற்சியும் தீவிரப்படுத்துவோம்.
 இரட்சிப்பின் நிச்சயம் பெறுவோம், 
அழிவில்லாத நிலையான கிரீடத்தை அடையும்படி ஓடுவோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED