ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
1 கொரி 15:33
கூட்டாளிகளை வைத்தே நம் குணநலன்கள் அறியப்படும்.
கூடுவார் நல்லோராயின், அந்த சகவாசம் நன்னடத்தையை கூட்டும்,
நற்பண்புகளை வெளிக்காட்டும்.
சகவாசம் தவறானால் வாழ்வெல்லாம் எரியும் விறகாகும்.
ரத்தஉறவு சொல்வதைவிட நட்புறவு சொல்வதை தான்
நமது மனம் சட்டென ஏற்கும். நட்பு விதைக்கும் விதைகள் நீரின்றி,
உரமின்றி, ஒளியின்றி, வளியின்றி விருட்சமாகும்.
அத்தகு முக்கியமான நட்புறவை கவனமாக தெரிந்தெடுப்போம்.
Amen
ReplyDelete