கலப்படமில்லா சத்தான சாப்பாடு

அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், 
துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், 
கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
II கொரி 2:17

பவுலடியார் வாழ்ந்த காலத்திலும் தமது வசதிக்கேற்றார் போல் 
தேவவசனத்தைத் திரித்து, புரட்டி கலப்புள்ள திருவசனம் 
போதிக்கப்பட்டிருக்கிறது. அவர் அதை எதிர்த்தார். 
அதோடு, கலப்பில்லாது  துப்புரவாக, 
இறைவனால் அருளப்பட்டபடி பேசினார். 

வருமானத்திற்காக வசனம் பேசுவோரை கண்டறிய, 
நாம் திருவசனத்தை கசடற கற்பதே ஒரே வழி! 
எந்நிலையிலும், எவ்விடத்திலும் நமக்கு ஏற்ற்றாற்போல் 
வசனத்தை மாற்றாமல், துப்புரவாக, தெளிவாக, 
கலப்பற்ற சத்தியத்தை பறைசாற்றுவோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED