கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும்,
தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த
உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
II கொரி 8:2
மக்கெதோனியா எனும் நாட்டு மக்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே
சோதிக்கப்பட்ட போதும், வறுமைக்கு வாழ்க்கையை
தாரை வார்த்தபோதும், தான தர்மம் செய்வதை சந்தோஷமாகவே
நினைத்து தயாளமாய் கொடுத்து வந்தார்கள்.
கிட்டத்தட்ட நமது வாழ்விலும் இந்த சூ(சு)ழல் தான்.
வட்டி, கடன், EMI, திடீர் செலவு, . . .எனினும் நம்மை விடவும்
தீர்க்கமுடியாத தேவையிலுள்ளோர் இருப்பது நிசமே. எனவே,
இயன்றதை மனமகிழ்ச்சியோடு கொடுப்போம் இல்லாதவர்க்கே.
Amen
ReplyDelete