இறையோடும் இனத்தோடும்

கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும்
 யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.
II கொரிந்தியர் 8:21

இறைவனோடு சதா இசைந்திருக்க விரும்புகிறோம்; 
அவரோடுள்ள உறவை வலுப்படுத்த, அவரிடம் நற்சான்று பெற 
நம்மாலான நன்மையானவற்றை, எல்லா நாளும் செய்து 
நாளுக்குநாள் கடவுளோடு இணக்கமாகவே விரும்புகிறோம். 

நாம் கடவுளோடு மட்டுமல்ல,
மனிதரோடும் இதே நடைமுறையைத் தொடர வேண்டும் என்று
பவுலடியார் தம்மை உதாரணமாக்கி, நம்மை உற்சாகமூட்டுகிறார்.
நாமும் இறை முன் மட்டுமல்ல, 
நம் இனம் முன்னும் நலமே செய்ய நாடுவோம்.

Comments