இருட்டிலும் வெளிச்சம்

என் கிருபை உனக்குப்போதும்; 
பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். 
II கொரி 12:9

ஆழிக்குள் இருந்தாலும் ஆறுதல் அளிக்கும் இறை வார்த்தையிது.
கஷாயங்கள் கொடுக்கமுடியாத பலனை
கர்த்தர் மட்டுமே கொடுக்கமுடியும்.
நம்முடைய பலவீன நேரங்கள் இறைவனது
பலத்தையே நமக்கு நினைவுபடுத்துகிறது.

நாவின் சொல்லுகள் குத்தினாலும், நாளும் முள்ளுகள் குத்தினாலும்
 நம்மை தாங்கி நடத்துவது கர்த்தரின் கிருபை ஒன்றே.
நாம் பலவீனமாக இருக்கிறோம் எனில், 
கடவுளது பலன் நம்மீது பரிபூரணமாக செயல்படும்
என்றெண்ணி அகமகிழ்வோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED