. . .நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல்,
என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய
கிருபையினால் அழைத்த தேவன். . .
கலா. 1:15
பவுல் முன்னதாக தன் மார்க்க வெறிபிடித்து திரிந்தபோது
தேவ மக்களை மிகவும் துன்பப்படுத்தினார்.
அச்செயல்களை வெறுத்த தேவன்,
அவரை ஒருபோதும் வெறுக்கவில்லை.
தாம் முன்குறித்தபடி தம் கிருபையால்
பவுலை திருத்தி தம்மகம் சேர்த்தார்.
நம் தாயின் கருவில் இருந்தது முதல்,
நம்மையும் பிரித்தெடுத்த தேவன்,
தம்மிடம் சேர்க்க ஆசையுள்ளவராயிருக்கிறார்.
நமது கிரியைகளினால் அல்ல; அவரது கிருபையினால்.
நாம் எந்நிலையில் இருந்தாலும் அவரிடம் சேர்ப்பார்.
நாம் தயாராவோம்.
Amen 🙏
ReplyDeleteAmen
ReplyDelete