அவரைப் போல

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, 
கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, 
நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 
எபே. 4:32

சகோதரத்துவத்துடன் சேர்ந்து வாழ வேண்டிய நாம் 
சண்டைபோடுவதால் பாதிப்பு நமக்கு தான். 
"மல்லாந்து உமிழ்ந்த எச்சில், மார்மேல் தானே விழும்". 
எனவே, நாம் ஒருவருக்கொருவர் தயவுடனும், கரிசனையுடனும் 
இருப்பதே நமக்கான அழைப்பு.

மறக்கமுடியாத சிறுசிறு மனக்கசப்பால் உறவுமுறைகளே முறிகிறது. 
"நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?" 
எனவே, மறப்போம்; மன்னிப்போம். 
பரம பிதா நம்மை மன்னி(ப்ப)த்தது  போல 
நாமும் பிறரை மன்னிக்கவேண்டும்.

Comments

  1. மறப்போம்; மன்னிப்போம்.

    ReplyDelete
  2. நல்ல கருத்து. சிறப்பு சகோ.

    ReplyDelete
  3. ஒரு சுயபரிசீலனை, வெளியில் நாம் செல்லும் இடமெல்லாம் எதிர்மறையாக நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம், வீட்டிற்குள் நுழையும் நாம் நம் வீட்டாரிடம் எப்படி நடந்துக்கொள்கிறோம்?

    ReplyDelete
    Replies
    1. சிறந்த தற்பரிசோதனை . நம் மனமே இதற்கு பதில்

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED