செயலால் பேசுங்கள்

பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல்,
கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
எபே. 6:4

கோபப்படுத்தாமல் சிட்சை செய்வதா ? பிள்ளைகள் செய்த தவறை உணர்த்தி 
திருத்துவது தான் நோக்கமே தவிர, குற்றப்படுத்துவதல்ல! 
களை பிடுங்காப் பயிர் காற்பயிர் தான், 
களையைவிட பயிர் முக்கியம் என்பதை மறந்துவிடக்கூடாது.

பெற்றோரைப் பார்த்தே பிள்ளைகள் வளர்கிறார்கள். 
நம் பிம்பங்களாகிய அவர்களை வளர்க்கும் பொழுதே 
கடவுளின் போதனைகளை குறைவில்லாமல் ஊட்டி வளர்த்தால், 
பசிக்கும் பொழுதெல்லாம் அசைபோட எளிதாக இருக்கும்.

Comments

  1. நல்ல மொழி நடை . வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு நன்றி

      Delete
  2. சிறந்த கருத்து

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு நன்றி

      Delete
  3. Alagana (aalamana) karuthu thambi 👍

    ReplyDelete
  4. கோபப்படுத்தாமல், ஒரு சிறு உதாரணம், நம் பிள்ளைகளை பார்த்துக் கீழ்படி என்று சொல்லும் போது பிள்ளைகள் கோபப்படுகிறார்கள். ஏன்? நாம் நம்முடைய துணையிடமோ, பெற்றோர் ஸ்தானத்தில இருப்போரிடமோ கீழ்படிகிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம், நம்மை பார்த்தே வளரும் பிள்ளைகள்? பெற்றோர், வாழ்க்கை துணை, பிள்ளைகள், இம்மூன்றில் ஒருவருக்காக ஒருவரை விட்டுக்கொடுத்து பேசும் போதும் கோபத்தை ஏற்படுத்துகிறவர்களாயிருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சிறந்த கருத்து. மேலான கருத்துக்கு நன்றி அண்ணா

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED