கருமமே கண்ணாயினார்

உங்கள் வேலையைச் செய்யுங்கள். சந்தோஷமாய் செய்யுங்கள். 
கர்த்தருக்கு சேவை செய்வதுபோல எண்ணுங்கள்.
 மனிதருக்கு சேவை செய்வதாக எண்ணாதீர்கள். 
எபே. 6:7 (ERV )

நமது வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசத்தை
வெளிக்காட்டுவது நமது பணிமனைதான்.
நமக்கு கொடுக்கப்பட்ட வேலை 
எதுவாயினும் சந்தோசமாக செய்வோம். 
சந்தோசம் வந்தாலே தெளிவும் துணிவும் 
நம்மை இறுகப் பற்றிக்கொள்ளும்.

செய்யும் வேலையில் உண்மையாக இருப்போம். 
நமது வேலையை வெறும் உடல் உழைப்பாக எண்ணாமல், 
இறை அழைப்பாக நினைத்து பணிசெய்வோம். 
நாம் செய்யும் வேலையை மனப்பூர்வமாக செய்வோம்;
மனநிறைவுடன் மகிழ்வாய் வாழ்வோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED