போராளி

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு
 எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, 
தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் 
தரித்துக்கொள்ளுங்கள். 
எபே 6:11

உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கஷ்டங்கள் நமக்கு வரும். 
இம்மை வாழ்வில் பிசாசின் அனைத்து தந்திரங்களோடும்
 நாம் எதிர்த்து நிற்கவும், தேவனுடைய போர் படையில் 
நல்ல போர் வீரராய் நாமிருக்கவும் "சர்வாயுதவர்க்கம்" 
அணிந்து கொண்டு நிற்க நாம் அறிவுறுத்தப் பட்டிருக்கிறோம்.

உண்மைத் தன்மை, நீதி நிறை வாழ்வு, மீட்பளிக்கும் 
நற்செய்தியினை நானிலமெங்கும் அறிவிப்பிதற்கான ஆயத்தம், 
வீழ்ந்திடா விசுவாசம் நிறை உள்ளம்,
 இலவசமாய் பெற்ற இரட்சிப்பை இறுக பற்றி நிற்றல், 
இறைவார்த்தையின்படியே வாழ்ந்திருத்தல் 
ஆகிய இவைகளே சர்வ ஆயுதம். 
இவற்றாலே நாம் எதிரியினை எதிர்க்கவும், 
தேவ பெலத்தோடு ஜெயிக்கவும் நிச்சயம் முடியும்.

Comments

  1. சிறந்த கருத்து , சிறந்த விளக்கம்

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு நன்றி

      Delete
  2. நல்ல போராளியாக வாழ்வோம்.

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு நன்றி

      Delete
  3. Replies
    1. அணிவோம்! அணிவகுப்போம்!! வெற்றிக்கொண்டு ஆர்பரிப்போம்!!!

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED