நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற
தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 2:4.
எலும்பில்லா நாக்கு எப்படியும் பேசும்;
பூமாலை போட்டு போற்றும், புழுதிவாரி தூற்றும்.
ஆளுக்கேற்றார் போல அழகுற பேசுவதல்ல சிறப்பு.
அடிஆழ்மனதில் உள்ள உண்மைகளை
உள்ளபடி நல்லவிதமாய் பேசுவதே சிறப்பு.
இதில்தான் ஆண்டவரும் பிரியப்படுவார்.
இதயத்தில் உண்மையாய் தேவனுக்கு
பிரியமுண்டாக பேசுபவன் உத்தமன்.
அவனை ஆண்டவரும் விரும்புகிறார், நம்புகிறார், துணை நிற்கிறார்.
நாமும் மனிதருக்கு பிரியமாக அல்ல;
மனப்பூர்வமாய் ஆண்டவருக்கே பிரியமுண்டாக பேசுவோம்.
Amen🙏
ReplyDeleteBlessings Upon U Anna
DeleteAmen. Praise the Lord
ReplyDeleteGod Bless
DeleteBlessings Upon U Ramya
ReplyDeleteமிக்க நன்றி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.
ReplyDelete