மின்னுவதெல்லாம் பொன்னல்ல

எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, 
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 
பொல்லாங்காய்த் தோன்றுகிற 
எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். 
I தெசலோனிக்கேயர் 5:21-22

சிலரது பேச்சுக்கள் தட்டி எழுப்பும், 
சிலருடையவைகளோ முற்றிலும் குழப்பும்.
கேட்கும் எல்லாவற்றையும் அப்படியே நம்புவது ஆபத்து. 
ஏன், எதற்கு, எப்படி என்பதைப்போன்ற கேள்வியால்
எல்லாவற்றையும் அலசி ஆராய்வது நல்லது.

வெளுத்ததெல்லாம் பால் என்று சொல்லாமல் 
ஆராய்ந்து அறிவதே நமது அறிவு.
எல்லா சூழலிலும் நமக்கு நன்மையாக தோன்றுபவைகளை 
பின்பற்றுவதும், பிடித்துக்கொள்வதும் உகந்தது. 
சில காரியங்கள் நமக்கு பொல்லாப்பாய் தெரிந்தாலோ,
 சந்தேகம் ஏற்பட்டாலோ அடியோடு விட்டுவிலகுவது சிறந்தது.

Design by N.Kumar

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED