ஒரே ஒரு வழி

தேவன் ஒருவரே, தேவனுக்கும் 
மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 
I தீமோத்தேயு 2:5

நம்மை படைத்த இறைவன் ஒருவரே. 
அவருக்கும் நமக்குமான உறவுக்குள் நாம் உறுதிபட 
ஆளைத்தேடிப் போகவேண்டிய அவசியமில்லை. 
நம் மீட்புக்காக தன்னையே தந்த இயேசுகிறிஸ்துவே நமக்கான வழி. 
அவர் ஒருவரே வழி, அவர் மூலமே இரட்சிப்பு. 

பிரச்சனை வந்தால் பரமபிதாவை தேடுவதை விடுத்து 
பிரசங்கியாரை தேடுதல் நல்லதல்ல என்று 
நமக்கு தெளிவாக போதிக்கப்பட்டிருக்கிறது. 
 பரமன் காட்டிய பிரதான பாதை ஒன்றிருக்க 
பக்கவழியும், குறுக்குப்பாதையும் நமக்கெதுக்கு?

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED