சுதந்திர காற்று

Image Source : bestlovesms.in

இந்தியாவின் 74வது சுதந்திர திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். 

பலர் ரத்தத்தில் விளைந்த நாடு 
பட்டொளி வீசிடும் பாரத நாடு.
நாட்டு விடுதலைக்காக நாளெல்லாம் 
உதிரத்தை உரமாக்கி நாட்டுக்காக 
உழைத்த உத்தமர்களை நினைவு கூறுவோம்.

சுதந்திர இந்தியாவின் 
நிரந்தர தேவைகளும் உண்டு. 

சுதந்திரம் பெற்றாலும் இன்று ஆயிரமாயிரம் 
காரணங்களால் சிறைப்பட்டு தான் கிடக்கிறோம்.
வன்முறைகளுக்கும், பிரிவினைகளுக்கும்,
போராட்டங்களுக்கும், கொலைகளுக்கும்,
குண்டுவெடிப்புகளுக்கும், சண்டைகளுக்கும் 
காமக்களியாட்டங்களுக்கும் வேர்கள் - சாதி, மதம்,
தேசியம், மொழி, இனம் என்னும் பிரிவினைகளே.

இன்று அடைபட்டு கிடக்கும் நாம் - இப்படி 
ஏதோ ஒரு விதத்தில் சிறைப்பட்டு தான் கிடக்கிறோம். 

மலம் அள்ளும் மனிதர்களும் 
பசியால் கையேந்தும் சிறுவர்களும் 
நிம்மதியில்லா கொத்தடிமைகளும் 
வீடில்லா சாலையோர வாசிகளும் 
வசதியின்றி படிப்பை நிறுத்தும் பிள்ளைகளும் 
பாகுபாட்டால் ஒதுக்கப்படும் மாந்தர்களும். . .  . .  
இப்படி எண்ணற்ற சொந்தங்களும் சுதந்திர காற்றை 
நிரந்தரமாக சுவாசிப்பதே நம் விருப்பமாகட்டும் 

சிறையில்லாத பிறையாய் வாழ்வதே 
நிறைவான மனமகிழ்வான வாழ்வு தான்.

"சுத்தமான குழாய் தண்ணீரும் 
தரமான ரேஷன் பொருளும் 
சொந்தமான வீடு ஒன்னும்
கழிப்பிடமுள்ள வீடுகளும் 
கலப்படமில்லா கல்வியும், மருத்துவமும் 
குறையில்லா இலவசமாக கொடுங்களேன்."

புதிய இந்தியா பொறக்கணும்னு விரும்புவோம் 
கேட்டதெல்லாம் கிடைக்கும்னு நம்புவோம் - ஏற்ற
தாழ்வில்லா சுதந்திர காற்றை சுவாசிப்போமெனும்  
நம்பிக்கையோடு நாளும் நடைபோடுவோம்.




(என்னோடு பேசிய இப்புகைப்படமே மேலுள்ள வரிகளுக்கு மைஊற்றியது. 
மாண்புமிக்க கவிஅன்பு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை பதிவிடுகிறேன்.)

Comments

  1. மிகசிறந்த கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சார்ந்த நன்றி

      Delete
  2. சிறந்த கவிதை.

    ReplyDelete
  3. Awesome words which describes the current situation of India.to get real independence long way to go.

    ReplyDelete
  4. மலம் அள்ளும் மனிதர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. எனக்கும் அவர்களை பற்றி உண்டு. நன்றி நண்பா.

    ReplyDelete
    Replies
    1. நல்லுள்ளம் கொண்டோரே மனதின் அடியாழத்திலிருந்து நன்றி

      Delete
  5. Super.................👌👌👌👌👌

    ReplyDelete
  6. அருமை ����

    ReplyDelete
  7. வந்தே வந்தே மாதரம் நொந்து நொந்து சாகிறோம்.... அமெரிக்காவைப் போல என் நாடு வல்லரசு ஆகுது ரெண்டு ரூபா அரிசி கக்கூசுக்கு நாலு ரூபா வந்தே வந்தே மாதரம் என் மாதரம்.......

    மகிழ்ச்சி அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. "வரி"களைப் பற்றிய "கருத்துநிறை வரிகளுக்கு" நன்றிகள்

      Delete
  8. மிகவும் அழகான கவிதை

    ReplyDelete
    Replies
    1. அன்பு நிறை நண்பனுக்கு நன்றிகளும் வணக்கங்களும்

      Delete
  9. Wonderful poetry sir, very important for people to think about.

    ReplyDelete
  10. Samooga sinthanaiyai thelivupaduthum oru pathivu. Vaalthukkal

    ReplyDelete
    Replies
    1. Romba Nandri. Ungalathu paaraatu urchaagam kodukirathu.

      Delete
  11. Replies
    1. Thank You for Your Blessings. I am very grateful to You

      Delete
  12. உங்களது வாழ்த்துதளுக்கு நன்றிகள் வினோத்..

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED