தேவையா - தேவதையா?

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; 
I தீமோத்தேயு 6:10

பணம் வைத்திருப்பது தப்பில்லை; 
பணத்தின் மேல் ஆசை வைத்திருப்பது தான் தப்பு. 
பண ஆசை சகல துன்பங்களுக்கும் தூபம் காட்டி வரவேற்கும்.
 பண தேவைக்கும், பண ஆசைக்கும் வெகுவான வித்தியாசம் உண்டு. 
தேவையை 'தேவை'-யாய் பார்ப்போம்; 
'தேவதை'-யாய் பார்க்கவேண்டாம்.

பணத்தை வைத்து புத்தகத்தை வாங்கலாம்; புத்தியை வாங்க முடியாது. 
 குடிக்க குடிக்க தாகம் அடங்காத கடல்நீரைப்போல தான் பணமும். 
பணத்தின் மேல் உள்ள இச்சை ஒழுக்கக்கேட்டில் தான் முடியும்,
 ஓயாத வேதனையில் தான் விடியும்.






Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED