வீணான பேச்சும்; வெற்று ஞானமும்

சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், 
ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற
 கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
I தீமோத்தேயு 6 : 20

யாரோடு சேர்கிறோமோ அவர்களது பிரதிபலிப்பு நம்மில் அதிகமாக இருக்கும். 
சிலருக்கெல்லாம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம். 
நயவஞ்சகமாய் பேசுவோரும், தன்னை ஞானியாக எண்ணுவோரும் பேராபத்து. 
இவர்களோடு இணைவது பாம்போடு பிணைவதற்கு சமம். 

கனியால் மரமும், நண்பர்களால் நாமும் அறியப்படுவோம். 
இருக்கும் இடத்தை வைத்தே கத்தியின் மதிப்பு; நமக்கும் இதே விதி தான்.
 சீர்கேடான வீண்வார்த்தைகளுக்கும்; பொய்யான ஞானங்களுக்கும் விலகுவோம்.
சர்வத்தையும் படைத்தாளும் சர்வ ஞானியிடம் சங்கமமாக வேண்டுவோம்.


Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED