பயமும் பலவீனமும்

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், 
பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
II தீமோத்தேயு 1:7

அநேக நேரங்களில் காரணத்தோடும், காரணமின்றியும் பயம் நம்மை பந்தாடும்.
 நமக்கு நேரிடும் இடர்கள், துயர்கள்  எல்லாம் ஆண்டவரால் அருளப்படுவதல்ல. 
கவலையும் பயமும் உற்றத்தோழிகள், உயிர்கொல்லிகள். 
வாழ்வளிக்கும் அன்பு ஆண்டவர் நாம் செழித்து வாழ்வதையே விரும்புகிறார்.

பயம் பலவீனத்தையே கொண்டுவரும். 
ஆண்டவரோ நமக்கு பலத்தையும், அன்பையும், 
தெளிந்த புத்தியையும் கொடுத்திருக்கிறார். 
ஆண்டவர் தரும் அன்பு பரிசுகளால், 
நம்மை கொல்லத்துடிக்கும் கொடிய பயத்தை 
மேற்கொள்ள ஆண்டவரது துணையை நாடுவோம்.


Comments

  1. ஆமென்!

    பரமனின் துணைக் கொண்டு
    பயத்தை பயமுறுத்துவோம்
    கவலையை கவலைக் கொள்ளச் செய்வோம்
    கன்மலையாம் கிறிஸ்துவில் அடைக்கலம் புகுவோம்

    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. சிறந்த பதிவிற்காக நன்றி

      Delete
  2. மிக்க நன்றி. இறையாசி நடத்தட்டும்.

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED