பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி,
சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே,
நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும்
சமாதானத்தையும் அடையும்படி நாடு.
II தீமோத்தேயு 2:22
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று போதிக்கும் திருமறை,
பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு விலகி ஓட சொல்லுகிறது.
எதிர்த்து நின்று பேசி, சமாளித்து, புத்திசொல்லி
ஜெயித்துவிடுவேன் என்றால், விக்கெட் வீழ்வது நிச்சயம்.
நமது அண்ணன் யோசேப்பு ஒடித்தானே தப்பித்தான்.
தப்பியோடும் நாம் எங்குசென்று ஒட்டிக்கொள்வது?
நற்கனிகள் (நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம். . ) எல்லாம்
பெற்றுக்கொள்ளும்படியாக, தூய்மையான உள்ளத்தோடு
இறைவனை தேடும் இறைமக்களைத் தேடி,
அவர்களை நாடி, அவர்களுடனே சேர்ந்துகொள்ளுவோம்.

Amen
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen
ReplyDeleteAmen🙏
ReplyDeleteAras Anna, Blessings Upon U
Deleteஆமென்!
ReplyDeleteமோத வேண்டிய இடத்தில் மோத வேண்டும் - அதுபோல
ஓட வேண்டிய இடத்தில் ஓடியே ஆக வேண்டும்
மோதும் இடத்தில் ஓடினாலும், ஓடும் இடத்தில் மோதினாலும்
சேதம் ஆவது நாம் தான் என்பதை சிந்திப்போம்
ஓடி சேரும் இடமும் மிக முக்கியம் அன்றோ
ஒன்றில் தப்பி மற்றொன்றில் சிக்கினால்
முன்னிலையிலும் பின்னிலைமை பரிதாபமாகிடுமே - எனவே
எந்நிலையிலும் மாறா இறைவனை நோக்கி ஓடிடுவோமே!
இறையாசீர் கிட்டட்டும்!!
சிறந்த பதிவிற்காக நன்றி.
Deleteஇறை ஆசி கிட்டட்டும்.
இரண்டு விரல்களை (V) காட்டினால் வெற்றி என்பது தான் அர்த்தம்.
ReplyDeleteஇத்தனை (2 தீமோத்தேயு 2:22) இரண்டுகளையும் கடைபிடித்தால் நம் வாழ்விலும் வெற்றி நிச்சயம்.
மேலான கருத்துக்கு நன்றி.
Deleteகர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.