எளிது - அரிது

வாலிபரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் 
நீ புத்திசொல்லி, நீயே எல்லாவற்றிலும்
 உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,. . . 
தீத்து 2:6-7

பிறர்க்கு புத்திசொல்லுதல் மிக எளிது; 
ஆனால், சொன்னபடி நாம் நடப்பது அரிதிலும் அரிது. 
சொல்லும் சொல்லிலும், செய்யும் செயலிலும் 
நாமே பிறர்க்கு மாதிரியாக இருக்க அழைக்கப்படுகிறோம். 
நமது வார்த்தையே வாழ்க்கையாகட்டும்.

பிறர் நம்மைப் பற்றி குற்றம் சொல்ல, 
தீயாய் வேலை செய்தாலும் நம்மேல் குற்றமேதுமில்லாதபடி 
நமது நன்னடத்தையும், நற்செயல்களும் இருக்கட்டும். 
இறைவார்த்தையின்படி நாமே முன்மாதிரியாக நடந்து காட்டுவோம்.


Comments

  1. சிறந்த கருத்து

    ReplyDelete
    Replies
    1. உங்களது ஊக்கப்படுத்துதலுக்கு நன்றி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete
  2. ஆமென்!

    இளவயதில் இன்பத்தை தவிர்த்து இன்னலைத் தெரிந்தெடுத்தல்
    தளராது தள்ளாடும் கிழப்பருவம் வரை சாட்சியாய் நிறுத்திடுமே

    சொல்லும் வார்த்தை, வாழ்க்கையாவதும்
    சொந்த வாழ்க்கையே, வார்த்தையாவதும்
    நம் வாழ்க்கையிலும், நம் வார்த்தையிலும் - இறை
    நம்பிக்கையிலும், நன்னடத்தையிலுமே உள்ளது

    'சொல்லுவது எளிதன்றோ
    சொல்லிய வண்ணம் செய்வது அரிதன்றோ' - என்று
    திருக்குறளும் திருவார்த்தையைப் பிரதிபலிக்கிறதே
    திருமறையை இறுகப்பற்றித் திறம்பட வாழ்ந்திடுவோமே!

    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. ஆகச்சிறந்த பதிவு. மகிழ்ச்சியான வாழ்த்துக்கள். இறையாசீர் உங்களை நடத்தட்டும்

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED