இயேசுதாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே,
அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு
உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
எபிரெயர் 2:18
நம்முடைய மூத்த அண்ணனாகிய இயேசுகிறிஸ்து,
நமக்கு இன்று நேரிடுகிற எல்லா சோதனையையும் அன்றே சந்தித்தார்;
சோதனைகளாலே பாடுபட்டார்; மரணத்தையும் ருசிபார்த்தார்.
ஆனால், அவரோ எல்லாவற்றிலும் மகிமையாக வெற்றிபெற்றார்.
நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்த நமது மூத்த சகோதரன்,
இரக்கமும் உண்மையுமுள்ளவர். நமக்கு நேரிடும் சோதனைகளிலெல்லாம்
நமக்கு உதவிசெய்ய அவர் உற்சாகமாய் இருக்கிறார்.
எனவே, நாம் தனித்து போராடுவதை விடுத்து,
சதாகாலமும் அவர் துணையை நாடுவோம்.
புகைப்பட ஆதாரம் : Dailymail.co.uk

Amen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Anna
DeleteAmen
ReplyDeleteGod Bless
DeleteJesus is with us.............
ReplyDeleteBlessings Upon U Godwin
Deleteசிறந்த கருத்து
ReplyDeleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Vinoth
Deleteஆமென்!
ReplyDeleteஅன்பு இறைவன் - நமக்கு
அருளிய பரிசுகள் பல!
அதில் சிறந்ததொன்று
அண்ணன் இயேசு கிறிஸ்து
அதற்கடுத்த அருமையானது
அரவணைக்கும் ஆவியானவர்
அதனினைத் தொடர்ந்து
அருள் நிறை திரு வார்த்தைகள் - என
அடுக்கிக் கொண்டேப் போகலாம்
அண்ணன் இயேசுவோ நமக்கு முன்னோடி
அன்றே இவ்வுலகில் சராசரி மனிதனாய்
அனைத்தையும் சகித்து முன்மாதிரியானார்
அவரின் வெற்றியை நாம் தொடர்ந்து பற்றி
அவரின் அடிச்சுவட்டில் நாம் நடந்துச் சென்று
அவர் துணைக் கொண்டு தீவினை வென்று
அர்ப்பணிப்புடன் இவ்வுலக வாழ்வினை நாம்
அழகாய் வாழுவோம் இனிதே முடிப்போம்
இறையாசீர் கிட்டட்டும்!!
ஆகச்சிறந்த அகர வரிசை விளக்கம் இறைவசனத்தை தெளிவாக்குகிறது . இறையாசீர் உரித்தாகுக.
Delete