நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை
முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில்,
கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
எபிரெயர் 3 : 14
அடிமைத்தன வாழ்வில் இருந்து மீட்கப்பட்ட துவக்கத்தில்,
ஆண்டவர் மேலுள்ள நம்பிக்கையும், பற்றும் அளவுகடந்து இருக்கும்.
ஆரம்பத்தில் கடலைத் தாண்ட திட்டம்போட்டு, பின் கால்வாயை
தாண்டக்கூட கஷ்டப்படும் நிலைக்கு சிலவேளை நம் நம்பிக்கை மாறுபடும்.
நிறை வாழ்வை நோக்கிய நம் அனுதின நகர்வில்,
'நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக' நாம் வளர
நம் பரமபிதாவின் மேலுள்ள நம்பிக்கையை
இறுதிவரை உறுதியாக்குதல் அவசியம்.
நம்பிக்கையில் நாளும் நிலைப்போம்,
இறைவாழ்வில் கிறிஸ்துவோடு இணைவோம்.
புகைப்பட சான்று : Bleacher Report

Amen🙏
ReplyDeleteGod Bless.
DeleteIruthivaraiyilum, Irivan melum uruthiyaaga iruthivarai nilaithiruppom. Amen
ReplyDeleteAmen. Blessings Upon U
Deleteஆமென்!
ReplyDeleteஇகவாழ்வில் இடுக்கனில் தவிப்போர்
இயேசு கிறிஸ்துவை அண்டிக்கொண்டு
இறுதி வரை உறுதியுடன் அவரை நம்பினால்
இம்மையில் மட்டுமல்ல இன்பம் பெறுவோம்
இனி வரும் வாழ்விலும் அமைதிக் காண்போம்
இறுதி வரை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள!
உறுதியான அஸ்திவாரம் இயேசு கிறிஸ்துவே!!
இறையாசீர் கிட்டட்டும்!!
மிக சிறந்த பதிவு. வார்த்தைகளின் வளமை கருத்துக்கு வளம் சேர்க்கிறது. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.
DeleteAmen 🙏🙏🙏
ReplyDeleteAmen
ReplyDeleteGod Bless
Delete