உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு,
நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும்,
விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
I தீமோத்தேயு 4:12
நகம் வெட்டுவதோ, நல்வழி நடப்பதோ எதிலும் முன்மாதிரியாக இருக்க
முயற்சி செய்வோம்; சிரமம் வருமாயின் பயிற்சி செய்வோம்.
நம் செயல்பாடுகளால் பிறர் நம்மை கேலிப்பொருளாக்கி
குற்றப்படுத்தாதபடி பார்த்துக்கொள்வோம்.
உணவு, உறக்கம், ஒழுக்கம், உழைப்பு, சேமிப்பு இவ்வனைத்திலும்
எறும்பு தான் நமக்கு ஆகச்சிறந்த முன்மாதிரி.
கண்காணிக்க அதிகாரி இல்லாதிருந்தும் தன் வேலையை
நேர்த்தியாகவும் உத்தமத்தோடும் செய்கிறது.
எறும்பிடம் படிப்போம்; எல்லாவற்றிலும் முன்மாதிரியாக நடப்போம்.

Nice Thought. Amen
ReplyDeleteThank God.
Deleteபிறரோடு பழகுவதிலும் நாம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
ReplyDeleteமிகச்சரியான பதிவுக்கு நன்றி
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
Deleteசிறந்த கருத்து
ReplyDeleteஉற்சாப்படுத்துதலுக்கு உளமார்ந்த நன்றி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்
Delete