கீழ்படிதலே மேல்படி

அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே
 கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும்
நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,. . . 
எபிரெயர் 5:8-9

உலகத்தின் சகல அதிகாரமும் இறைமகன் இயேசு கிறிஸ்துவிடம் 
கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர் எல்லா இடத்திலுமே தமது தந்தைக்கு 
கீழ்படிந்தே வாழ்ந்தார். அப்படி கீழ்படிந்ததால், இயேசு கிறிஸ்து
 நம் அனைவரின் இராட்சராக, தேவனால் உயர்த்தப்பட்டார்.

"கீழ்ப்படிதலே மேல்படி" என்கிறது திருமறை. எல்லா இடத்திலும்
 சட்டதிட்டங்களுக்கு நாம் கீழ்படியவே அறிவுறுத்தப்படுகிறோம்.
 சிலுவையில் தொங்கி சாகும் வரை கீழ்படிந்தே வாழ்ந்த, 
கனிவாக கற்றுக்கொடுக்கும் நல்லாசிரியர் இயேசுவிடமே 
நாமும் கீழ்ப்படிதலை கற்றுக்கொள்வோம்.

Image Source : Bridges.com

Comments

  1. ஆமென்!

    கிறிஸ்துவேக் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார்
    கிறிஸ்துவை பின்பற்றும் நாம் வேறென்ன செய்ய வேண்டும்
    கீழ்படிந்ததால் அவர் உயர்த்தப்பட்டு கீரிடமும் பெற்றார்
    கீழ்படிந்து நாமும் நம் பலனை ஏற்ற காலம் பெறுவோம்

    கீழ்படிதலே மேல்படி என்பது முற்றிலும் உண்மை
    கீழ்ப்படியில் கால் வைக்காமல் மேலேறுவது எங்கனம்
    தன்னை தாழ்துகிறவன் நிச்சயம் உயர்த்தப்படுவான்
    தன்னை கிறித்துவுக்கு அர்பனிக்கிறவன் ஜீவனைப் பெறுவான்

    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. கீழ்ப்படிதலை பற்றிய ஆகச்சிறந்த வரிகள். இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED