கனி கொடுப்போம்

தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து,
தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற 
பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
எபிரெயர் 6:7

'பொழியும் வானின் நீரைப்பருகி, அந்நிலத்தில் வளரும் பயிர்கள் பெருகி!'
 மழை பொதுவானது, பாரபட்சமில்லாதது. அதில், முள்ளும்-புதரும் வளரலாம்; 
எள்ளும்-கொள்ளும், பூவும்-பழமும் விளையலாம். 
விளைச்சல் தான் விளைநிலத்தின் மதிப்பைக் கூட்டுகிறது.

நமக்கும் அருளுரைகள் மழையாக பொழியவும்,
 இறைவார்த்தைகள் விதையாக விதைக்கவும்படுகிறது. 
அவையெல்லாம் வீணாவதும், வீணையாவதும் நமது கையில். 
படிப்படியான வளர்ச்சிக்காக இறைவனிடம் வேண்டுவோம், 
நல்ல கனிகளை கொடுப்போம்.

புகைப்பட ஆதாரம் : TourdeForm

Comments

  1. இறுதியில் நல்ல கனிகொடா செடிகள் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்..

    ReplyDelete
    Replies
    1. எனவே, நல்ல கனி கொடுப்போம்

      Delete
  2. ஆமென்!

    வணைந்த மண் பாண்டம் விளக்காவதும் வீணாவதும்
    வணைந்த குயவன் கையில் அல்லவோ உள்ளது
    வளர்ந்த தேக்கு மரம் நல்ல வீடாவதும் விறகாவதும்
    வகையாய் அதனை செய்யும் தச்சனிடமே உள்ளது

    பொழிந்த மழையினை தன்னுள் வாங்கிக் கொண்டு
    செழிப்பான கணி மரங்களையும் புதர்களையும் தருகிற
    நிலமானது படைத்த பரமனின் பாரபட்சமற்ற தன்மையினால் அன்றோ - எனவே
    கழனியாம் இருதயத்தில் விதைக்கப்பட்ட இறை வார்த்தைகளும்
    பலனளிக்க, பயனற்றுப் போகாமல் கனி கொடுக்க
    உளமார நம்புவோம் உண்மைக் கடவுளை உள்ளளவும் உறுதியாக.

    இறையாசீர் கிட்டட்டும் !!!

    ReplyDelete
    Replies
    1. ஆகச்சிறந்த விளக்கத்திற்காக நன்றி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete
  3. சிறந்த கருத்து

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED