சிந்தனையில் மாற்றம்

நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, 
அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் 
இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எபிரெயர் 8:12

நம்மை கிருபையாய் மீட்டுக்கொண்ட ஆண்டவர் தாமே,
 நமது அநியாயங்களை மன்னித்ததோடல்லாமல்,
நமது பாவங்களையும், நாம் செய்த அக்கிரமங்களையும் 
இனி அவர் என்றுமே நினைப்பதில்லை என்று 
ஆண்டவரே நம்மிடத்தில் வாக்கு கொடுக்கிறார்.

நம்முடைய அனுதின வாழ்வில் நமக்கு மிகப்பெரிய 
போராட்டமாக அமைவது, நமது கடந்த கால பாவங்களின் நினைவுகள்.
ஆண்டவரே, நினைக்கமாட்டேன் என்று மறந்து விட்ட நமது குற்றங்களை, 
நாம் மட்டும் நினைப்பது சரியா? 
பழைய பாவ நினைவுகளை மேற்கொள்ள ஜெபிப்போம்.

புகைப்பட ஆதாரம் : quantenfroscwebservices.com

Comments

  1. Replies
    1. இறையாசீர் உங்களை நடத்தட்டும்

      Delete
  2. ஆமென்!

    இறைவன் மன்னித்து மறந்து விட்டதை - இன்னும்
    கறை என நாம் ஏன் நினைத்து கொண்டு இருக்கிறோம்!
    மறவாமல் அவர் நினைத்திருக்க சொன்னதை - ஏன் நாம்
    தவறாமல் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

    பின்னானவைகளை மறக்கவே அறிவுறுத்த பட்டிருக்கிறோம்
    முன்னானவைகளை நாடி ஓடவே அழைக்கப் பட்டிருக்கிறோம்
    நிச்சயிக்கப் பட்டிருக்கும் பந்தயப் பரிசினை - கிருபையால்
    நிச்சயம் பெற்றிட தொடர்ந்து முன்னேறுவோம்...

    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. கவி வடிவில், கருத்து பெட்டகம். ஆகச்சிறந்த பதிவு. இறையாசீர் உங்களை நடத்தட்டும்

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED