பொறுமை அது பொற்பழம்

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, 
வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் 
பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
எபிரெயர் 10:36

ஒரு மனிதன் மீட்கப்பட்டதின் நோக்கமே, 
அவன் குன்றிலிட்ட விளக்கைபோலப் பிறர்க்கு வெளிச்சமாக 
இருக்கவேன்டும் என்பதே. நாம் செய்யும் செயல்களே 
நாம் யாரென்பதை இந்த பூவுலகிற்கு சான்று பகிரும்.
 நமது செயல்கள் தேவனுடைய விருப்பப்படியானதா?

தேவனுடைய விருப்பம் என்ன என்பதை 
அவரிடமே அறிந்துகொள்ளமுடியும்; 
அதற்கு பொறுமையாக காத்திருத்தல் மிக அவசியம். 
அவரிடம் காத்திருந்து, அவர் மனதின் விருப்பம் அறிந்து
 முடிவு வரை முழுமூச்சாக பணிசெய்வோம்;
 பரிசையும் பெற்றுக்கொள்வோம்.

புகைப்பட ஆதாரம்: wayne elsey



Comments

  1. ஆமென்!

    பொறுமை அது வேண்டியது
    பொறாமை அது வேண்டாதது
    பொறுமை இறைவனிடம் கொண்டு சேர்க்கும்
    பொறாமையோ எலும்புருக்கி, அழித்துவிடும்

    பொறுமை அது வேண்டியது
    பெருமை அது வேண்டாதது
    பொறுமை இறை சித்தம் அறிய உதவும்
    பெருமை இறைவனுக்கு நம்மை எதிரியாக்கும்

    பொறுமையைத் தரிப்போம்
    பொறாமையை விட்டொழிப்போம்
    பெருமையை முற்றிலும் தவிர்ப்போம்
    அருமையாய் வாழ்ந்து முடிப்போம்
    இறைவனை மகிமைப்படுத்துவோம்

    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. பெருமை பொறுமை, பொறாமை இவை எல்லாவற்றை பற்றியும் ஆகச்சிறந்த விளக்கமொன்றை பதிவு செய்த்தமைக்கு நன்றி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED