போனது போகட்டும் . . .

ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, 
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் 
பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். 
பிலி.3:13-14

நடந்ததை நினைத்து கலங்காமல், நடக்கப்போவதை எதிர்நோக்குவோம். 
ஒவ்வொரு நாளும் நமக்கு போதிக்கும்; 
போதனைக்கு சோர்ந்து போகாமல் ஓடுவதே சாதனை. 
ஓடுபவனுக்கு குறிக்கோள் தெளிவாக இருந்தால்
 துயரங்கள் எல்லாம் தூசு தான்.

போனது போகட்டும், புதிய பயணம் துவங்கட்டும். 
பரமன் அழைத்த அழைப்பு இதயம் தொடட்டும், பாதை தெளிவாகட்டும், 
தொடரோட்டம் தொடரட்டும், பந்தயப்பொருள் நம் இலக்காகட்டும், 
கிறிஸ்து இயேசுவே நம் துணையாகட்டும்!

Comments

  1. Great. Let us march.

    ReplyDelete
    Replies
    1. Let us march together, We press on toward the goal for the prize
      of the high calling of God in Christ Jesus. Amen

      Delete
  2. போனது போகட்டும்; புதிய பயணம் துவங்கட்டும், இறை இயேசு நடத்தட்டும். ஆமென்

    ReplyDelete
  3. ஓட்டத்தை தொடங்குவோம் ஜெயத்தை (பந்தயப்பொருளை) தேவன் நமக்கு தருவார் ஆமென் 🙏

    ReplyDelete
    Replies
    1. ஜெயம் கொடுக்கும் தேவன் தாமே இயேசுவின் திருப்பெயரால் நமக்கும்ஜெயம் கொடுப்பாராக

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED