வறுமையிலும் வசதியிலும்

தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; 
எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், 
பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். 
பிலி.4:12

அரைவயிறு கூழோ அளவில்லா பழரசச்சாறோ, 
நாலணா துட்டோ ரோஸ்கலர் கரன்சி கட்டோ . . 
ஏற்றமும் மாற்றமும் நிறைவாழ்வில் 
எந்நிலையாயினும் எச்சூழலாயினும் 
அதை மேற்கொண்டு வாழக் கற்றுக்கொள்ளவே 
நாளுக்குநாள் நாம் போதிக்கப்படுகிறோம்.

வறுமையில் வாடுகிறீர்களா? 
கடுவுளின் மீது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்!
  ஆசீர்வாதங்களால் நிரப்படுகிறீர்களா? 
அடுத்தவருக்கு கொடுக்கிறீர்களா என ஆராயப்படுகிறீர்கள்!! 
நிறைவாய் ஒன்று, நடத்தும் ஆண்டவர் நித்தமும் போதித்து நடத்துவார், 
நம்மை ஒருபோதும் கைவிடவே மாட்டார்.

Comments

  1. வறுமை வந்தால் வாடாதே; வசதி வந்தால் ஆடாதே.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. மிக்க நன்றி

      Delete
  2. சிறந்த கருத்து

    ReplyDelete
    Replies
    1. இறையாசீர் உரித்தாகுக

      Delete
  3. வாழ்விலும் தாழ்விலும் ஆண்டவரே உம்மைப் பற்றிக்கொள்ள உதவும்..

    ReplyDelete
    Replies
    1. அன்பரே இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED