நம் நாட்டம் நமக்கு ந(ஷ்)ட்டமா?

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
கொலோசெயர் 3:2

நம் எண்ணங்களும் விருப்பங்களும் சாதத்தையும் சம்பாத்தியத்தையும் 
சார்ந்தே இருக்குமாயின், நிலையான மகிழ்ச்சி மற்றும் நித்திய வாழ்வு 
இதெல்லாம் நமக்கு ஏட்டுச்சுரைக்காய் தான். 
மரணத்தோடு முடிவதல்ல நமது வாழ்க்கை. 

அழிந்து போகும் அற்ப செல்வங்களையே ஆதாயப்படுத்த 
ஆவல் கொண்டிருந்தால், அழிவில்லாத பொக்கிஷங்களை
விண்ணுலகில் நாம் சேர்ப்பதெப்போது. 
அழியும் மண்ணை விட அழியா மாணிக்கமே முக்கியம். 
விண்ணுலக மாணிக்கத்தை நாடியே நடைபோடுவோம்

Comments

  1. சிந்திக்க வைக்கும் சிறந்த கருத்து

    ReplyDelete
  2. உண்மை வரிகள்

    ReplyDelete
    Replies
    1. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete
  3. இந்த பகுதியை நான் வாசித்த போது வெளிப்பட்ட வேத வசனம், போதும் என்கிற மனதுடன் கூடிய தெய்வ பக்தி யே மிகுந்த ஆதாயம். நமக்கு போதும் என்கிற மனது இரு காரியங்களில் வந்துவிடுகிறது. எதில்? ஆன்மீகம் மற்றும் கஷ்டம். மற்ற எதுவானாலும் அதன் பிறகே நம் மனது ஓடிக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. போதும் என்கிற மனதுடன் கூடிய தெய்வ பக்தி யே மிகுந்த ஆதாயம். ஆமென் .

      Delete
  4. எல்லாம் நமக்கு தேவைதான் ஆனால் முக்கியமல்ல பரமண்டலத்தை தவிர.

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED