1176/1200

புகைப்பட சான்று : SOUND CLOUD   


அன்புத்தங்கையே அனிதா, 

நீ என் நினைவுகளில் 
நீங்காத நிழல் தான் !

நீ வாழமப்போன பூமியில 
"அனிதா" என யாரும் உச்சரித்தாலே 
உன் முகம் தான் பிரதிபலிக்கும்;
உன் முடிவு அதிரணமாய் வலிக்கும்.

உனது முடிவு சரியல்ல என்பது உண்மை !

ஆனால், முட்டாள்தனம், மூடத்தனம் என்போரே 
"வெவ்வேறு விதமான கல்வி, ஒரே தேர்வு !"
இதை நீங்கள் எப்படி வரையறுப்பீர்கள்?
'சான்றோர்களே சான்று கொடுங்களேன்.'

அத்தியாவசியம் எதுவும் சந்திக்கப்படாமல் 
ஒரு பெண் 1176/1200 மதிப்பெண்கள் எடுத்தும் 
அவளால் தன் கனவைத் தொடமுடியவில்லையே?

மருத்துவராக வாழ்ந்த உனது உணர்வுகளை 
மரமும் செடியும் கூட மனதார மதிக்கும், 
சமூகத்தின் சார்பாக மன்னிப்புக்கேட்கும்....

உன் சிகரம், லட்சியம் எதுவும் துளியும் தவறல்ல,
இந்த உலகத்தில் நமக்கானதையும், நாம் 
போராடித்தான் பெறவேண்டும் என்ற நிர்பந்தம் 

'சாமானியர் சண்முகம் பெற்ற இன்முகமே'
போராடி பெறமுடியாததற்காகவா நீ புறப்பட்டு சென்றாய்?

முடிக்கத்தெரியாமல் முடிக்கிறேன் . . . 




(மறதி எனும் தேசிய வியாதியால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒரு குடிமகன்.

மூன்றாண்டுகளுக்கு முன்னதாக இந்த நாளில் நம்மை மீளாத்துயரில் ஆழ்த்திய அன்புத்தங்கை DR. அனிதாவை மறந்துவிட்டேனே ?

அனிதாவை நினைவுபடுத்திய ராசா பாவாணருக்கு நன்றி!!!)




Comments

  1. மனது வலிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. உணர்வுகளுக்கு நன்றி.

      Delete
  2. மறதியை விரட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. சிந்தனைகளும் சிறையாகாமல் பார்த்துக்கொள்வோம்

      Delete
  3. அருமையான பதிவு அண்ணா

    ReplyDelete
  4. Nice jesma... English version also good..
    மறதியை முதலில் குணப்படுத்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. Welcome Senior. That is Auto Translated by Google.

      Delete
  5. தம்பி சிறந்த பதிவு டா. மொழிநடை சிறப்பு

    ReplyDelete
  6. Anna Nice Anna. Good Question about NEET.

    ReplyDelete
    Replies
    1. மருத்துவ கல்லூரிகளில் தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை நீட் தேர்வுக்கு முன் 2015-2016 கல்வியாண்டில் 510 பேரும், 2016-2017ல் 537 பேரும் சேர்ந்தார்கள். நீட் தேர்வுக்கு பின்பு 2017-21018 ல் 052 பேரும், 2018-2019ல் 106 மாணவர்களும் சேர்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

      Delete
  7. நமகானதையும் நாம் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மறுத்தாலும் இதுவே உண்மை.

      Delete
  8. Must do take action on this.any race must happen with equal competitors.make the syllabus same then they have to conduct the exam .it will be fair.and for her justice must be given without forgetting it ... heart touching words full ofhardsad heart ....sir

    ReplyDelete
    Replies
    1. Understanding the Key Factors and the Situations are the real credits

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED