ஆண்டவருக்குச் சித்தமானால்,
நாங்களும் உயிரோடிருந்தால்,
இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
யாக்கோபு 4:15
நாளைய தினத்தை நாம் அறியோம்; அடுத்த நொடி நமது கையில் இல்லை.
இப்படி சொல்வதால் எதிர்கால திட்டமே இருக்கக்கூடாது என்பது அர்த்தமல்ல.
எதுவும் நமது கையில் தான் இல்லை; ஆனால் , ஆண்டவர் கையில் உள்ளதே.
ஆம், அவர்கரத்தில் மட்டுமே உள்ளது.
"நாம் ஒன்றும் இல்லை; எல்லாம் அவரே"
என்று நம் வெறுமையை உணரஉணர முழுமையாக நிரப்ப(நடத்த)ப்படுவோம்.
நம் விருப்பப்படியல்ல, ஆண்டவரின் விருப்பப்படி செய்யவே எண்ணி,
நம்மை முழுவதும் அவரிடம் ஒப்படைத்தால்
முழுமையாக செழுமையாக நடத்துவார்.

Nice Thought
ReplyDeleteAmen
God Bless
DeleteAmen🙏
ReplyDelete