இது தான் அழைப்பு !

நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது 
பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? 
நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் 
அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
I பேதுரு 2:20

குற்றம் புரிந்ததற்குப் பெற்றதண்டனையை சகிப்பது சாதனையா? 
இல்லை, இது சாதாரணம்! காரி உமிழ்ந்தாலும் கனிவுடன் ஏற்ற 
கரிசனைக்கடல் அன்னை தெரசா போல புண்ணியம் செய்யப்போகையில் 
புழுதியை வாரி தூற்றினாலும் பொறுத்துக்கொள்வதே சாதனை.

நன்மைசெய்தே வாழ்ந்த இயேசு சுவாமி, துளியும் பாவமில்லாதவராயினும் 
மானிடகுலத்திற்காகவே பாடுபட்டு இரத்தம் சிந்தி துடிதுடித்து மரித்துப்போனார்.
 எல்லா விதத்திலும் நம் வாழ்விற்கான முன்மாதிரியை வைத்து சென்றவரின் 
அடிச்சுவட்டை பின்பற்றி நாமும் தேவனுக்கு பிரியமாக நடப்போம்.

புகைப்பட ஆதாரம் : pinterest

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED