கொஞ்சம் பொறுங்களேன் . . .

ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, 
அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
I பேதுரு 5:6

கோழிக்குஞ்சு வளர்ந்து, பறந்து உயரத்தை அடைவதையே 
தாய்க்கோழி விரும்பும்; காலம் வாய்க்கும்வரை தம் பிள்ளைகளை
 வெளியில்கூட விடாது. அதையும் மீறிச்செல்லும் கோழிக்குஞ்சுகள் 
பருந்துக்கு இரையாவதை கண்ணால் கண்டினும் தாயால் தடுத்திடமுடியமா?

சதாகாலமும், தமக்கு பிரியாமானவர்கள் மேல் கர்த்தர் மிகவும் கரிசனையோடிருக்கிறார். அவருக்கு பிரியமான நம்மை 
ஏற்றகாலத்திலே உயர்த்தவே கர்த்தர் விரும்புகிறார். 
காலம் வரும்வரை அவரது கிருபையின் கைக்குள் 
அடங்கியிருப்பதே உயர்வுக்கான ஒரே வழி.

புகைப்பட சான்று :swedonborgainchurches 

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED