கலங்காதே!

தேவன் உங்களை விசாரிக்கிறவரானபடியால், 
உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
I பேதுரு 5:7

வாழ்நாள் நெடுகவே தினமும் புதுப்புது கவலைகள் நம்மை புடமிடலாம்; 
நெருப்பாற்று நீச்சலே நித்தமும் ஆகலாம்! 'இது தீர்வில்லா வழிதானோ?' 
என்று எண்ணிவிடவே வேண்டாம். பகிர்ந்துகொள்ள வழியில்லை, 
ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லையே எனவும் நினைத்திடவேண்டாம்.

"சுமைசுமந்து சோர்ந்திருப்போரே, நீங்களெல்லாம் என்னிடம் வாருங்கள் 
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார் 
நம்மை நித்தமும் விசாரிக்கும் நமது அன்பு ஆண்டவர். 
பாரமெல்லாம் அவர்மேல் வைத்துவிட்டால்
பாடுகள் நமதல்ல அவர் பார்த்துக்கொள்வார்.

புகைபடச்சான்று :mobihealthnews.com

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED