எச்சரிக்கை !

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; 
ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் 
கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ 
என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
I பேதுரு 5:8

சமீபத்திய தற்கொலைகள் திடுக்கிடச்செய்கிறது.
அதிலும், மாணவர்களின் முடிவோ மிகவும் கவலையுறச் செய்கிறது. 
எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு! 
பிரச்னைகளின் இக்கட்டில் முடிவு எடுக்க முடியாமல் 
தடுமாறும்போது மனம் தற்கொலையை நோக்கி தீவிரிப்பதா? 

எல்லா சூழலிலும் எதிரியின் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க 
தெளிந்த புத்தியோடு விழிப்பாய் இருப்பது அவசியம். 
தெளிந்த மனதுடன் வாழ்வின் ஏமாற்றங்களை எதிர்கொள்ளவும், 
பொறுமையோடும், நம்பிக்கையோடும் நடக்க பெலன் வேண்டியும் 
நமக்காகவும், பிறருக்காகவும் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

புகைப்படச்சான்று :Pinterest.com

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED