. . .ஞானத்தோடே இச்சையடக்கத்தையும்,
இச்சையடக்கத்தோடே பொறுமையையும். . .
II பேதுரு 1:6
கேடுநிறைந்த இவ்வுலகில் அள்ளிக் குடிக்கக்குடிக்க
தாகம் அடங்காத கடல்நீரைப்போல ஆபாசங்களும்,
தீண்டும் அநேக அடிமைத்தனங்களும் நம்மை சிறைப்படுத்தி
சிக்கவைக்கும் கண்ணிகளாய் காலுக்கடியிலே கிடக்கிறது.
ஞானத்தோடே கூடிய இச்சையடக்கமே நம்மை தற்காக்கும்.
இச்சையடக்கம் முற்றிலும் நம்மை சார்ந்ததல்ல;
அஃது நமக்கான ஆண்டவரது உதவி.
பாடுள்ள எல்லா மனிதனுக்கும் இந்தப் பயணம்
ஒருநாள் மட்டும் அல்ல; ஒவ்வொரு நாளும்.
பொறுமையாய் ஒவ்வொருநாளும் நாம்
இறைஉதவியோடு உறுதியுடன் வெற்றியாய் கடப்போம்.
புகைப்படச்சான்று : Google Images

Amen.
ReplyDeleteBlessings Upon U John Samuel Sir
DeleteNice Thought
ReplyDeleteAmen
God Bless
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteஅருமையான புகைப்பட சான்று
தங்களது மேலான வாழ்த்துக்களுக்கு வணக்கங்களும், நன்றிகளும்.
Deleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்.
Amen
ReplyDeleteBlessings Upon U Mapla
Deleteஆமென்!
ReplyDeleteபாவத்தை விட்டு அதிவேகமாய் தெறித்து ஓடு
பாசமிகு இறைவனை முழு மனதுடன் தேடு
நாதன் இயேசுவில் நம்பிக்கையைத் தேடு
சாகா வரம் தரும் சாந்த சொரூபியை நாடு
'இல்லை இல்லை பத்தவில்லை' என்கிறது பாவம்
'எல்லையில்லா பேரின்பம் என்னிடம்' இது இறைவன்
தொல்லையில்லா வாழ்வு தொலைத் தூரமில்லை
கவலையில்லா வாழ்வு கைக்கெட்டும் தூரமே
தாகம் தீர்க்கா இவ்வுலகத்தின் (பாவம்) கடல் நீர் வேண்டாம்
தாகம் மறக்கச் செய்யும் இறைவனின் ஜீவத்தண்ணீர் போதும்
வேகம் வந்திடு இறைவனின் பிடியில் - இவ்வுலக
மோகம் மாயை என்றுணர்வாய் வேகம்
இறையாசீர் கிட்டட்டும்!!
அருமையான உஙகளது வரிகள் இறைவசனத்திற்கு கூடுதல் விளக்கம் கொடுப்பதற்காக மனமார்ந்த மகிழ்ச்சியும், நன்றியும். தங்களது மேலான கருத்துக்களுக்காக வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
Deleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்.