நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல,
அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை
நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை
அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
I யோவான் 4:10
இன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப்போல
அன்பும் பற்றாக்குறையாகவே உள்ளது.
தாயின் அன்பும் தணிந்துபோவதை காண்கிறோம்.
"எதிர்பார்ப்பில்லா அன்பு" என்று தேடின்,
வையத்தில் எங்குமில்லை என்பதே பதிலாகும்.
நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததால் அல்ல,
தேவன் நம் மீது எவ்வித எதிர்பார்ப்புமின்றி
எல்லையில்லா அன்புகூர்ந்ததாலே,
நமக்காக தமது ஒரே பிள்ளையை அனுப்பியதே
"எதிர்பார்ப்பில்லா அன்பு" என்பதின் இலக்கணம்.
அதே அன்பு நம்மிலும் நிலைப்பட, வெளிப்பட வேண்டுவோம்.
புகைப்படச்சான்று: பொன்மொழிகள்

Nice Thought
ReplyDeleteAmen
God Bless
DeleteAmen🙏🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
Deleteநல்ல சிந்தனை
ReplyDeleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்.
Delete