உயிர்மெய்

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று 
நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் 
அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
III யோவான் 4

'உண்மை'யை விட 'பொய்' எழுத்தில் சிறியது; ஆனால், புழக்கத்தில் பெரியது. 
போலியான காரியங்களே அசலை விட அதிகமாக கவரப்படுகின்றன.
ரயில் போல தொடர்ச்சியாக புழுகுவோர் மத்தியில்
 உண்மையையே பேசுவோர் வேற்றுகிரக வாசிகள் தான். 
ஆனாலும், உண்மை பேசுவதே உத்தமம்!

நாம் நேர்மையின் பாதையில் நடக்கிறோம்
 என்பதை பிறர் சான்று பகர்வது சாதாரணமல்ல. 
அச்சான்றே, நம்மை சார்ந்தோருக்கு நமது வெகுமதி. 
உண்மையையே பேசி, உண்மை வழிநடப்போமாகில் நமக்கு
இறைவன் என்றும் என்றென்றும் துணைநிற்பார், 
எந்நிலையிலும் வழிநடத்துவார்.

புகைப்படச்சான்று : Harvard Health

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED