பயணி. . . !

கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.
ஏசாயா 2:5

"பாதைகள் பலவாயினும் பயணம் ஒன்றே! 
திசைகள் எதுவாயினும் தெரிவு நமதே!." 
'சென்ற காலங்களையோ, கழித்த பொழுதுகளையோ நினைத்தும் பயனேது?' 
ஆனால், விடியும் ஒவ்வொரு பொழுதும், 
கடக்கும் ஒவ்வொரு நொடியும் ஒப்பற்ற இரத்தினங்கள். 

நாம் ஒவ்வொரு நாளும் அதிரடி முடிவு எடுத்தும், 
தொடர் தோல்விகளையே சந்திக்கும்போது  
அமாவாசையே அடைக்கலமாகிறது.
 இருள்சூழ்ந்த உலகில் ஒளி தேடும் நமக்கு கர்த்தரே வெளிச்சமாயிருக்கிறார். 
பாதை காட்டுவதோடல்லாமல் நம்மை நடத்தும் 
கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.

புகைப்படச்சான்று : The Psychologist 

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED