கிளி தேடும் மரம்

நெகிழ்ந்த கைகளையும் 
தளர்ந்த முழங்கால்களையும்
 நீங்கள் திரும்ப நிமிர்த்தி, . . . 
உங்கள் பாதங்களுக்கு 
வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.
எபிரெயர் 12:12-13

பிறர்க்கு கொடுத்தலும், இறைவனிடம் வேண்டுதலும் 
இங்கு ஒட்டி அமைந்திருப்பது நமக்கு மிகப்பெரியப்
பாடம் கற்றுக்கொடுக்கிறது. வறியவர்க்கு கொடுப்பதால்,
எளியவர் மீது இறைவன் கொண்டுள்ள 
கரிசனை நம்மூலமாக நிறைவேறட்டும்.

நாம் எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்பதல்ல, 
நாம் எவ்வளவு வைத்துக் கொள்ளவேண்டும்? என்பதே 
சரியான கேள்வி என்பார் திருப்பணியாளர் ஒருவர். 
ஜெபத்தில் ஆண்டவரோடு நாம் நெருங்க நெருங்க, 
கிளி தேடும் மரமாக பலருக்கு பயனளிப்போம். 
ஆண்டவரின் அன்பு பிள்ளைகளாகுவோம்.

புகைப்பட சான்று : Parrot Paradise 

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED