தயாளராஜா

தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், 
தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
ஏசாயா 32:8

அள்ளிக்கொடுக்கும் அருளாளரும் உண்டு; 
புதைத்து வைக்கும் பொருளாளரும் உண்டு. 
கலப்படமில்லாத பிறர்நலமே தயாளம். 
பிறரது தேவைகளை தனது சேவையாக்குகிறவர் தயாளத்தையே யோசிக்கிறார்.
அத்தகைய சுயநலமில்லா சமூகசேவையில் நிலைத்தும் நிற்கிறார்.

மகிழ்வுடன் கூடிய மலர்முக சேவையை நம் சமூகத்திற்கு 
செய்ய தயாளகுணம் படைத்தோரே தேவை. 
ஆகவே, எல்லாவற்றிலும் யாவரோடும் அன்பாகவும்,
தயவாகவும், தயாளமாகவும் நடக்க தீர்மானிப்போம். 
அதிலும், நமது இரட்சகர் இயேசு சுவாமியின் 
அடிச்சுவட்டையே பின்பற்றுவோம்.

புகைப்படச்சான்று: PICKPIK

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED