பதறாதே மனமே!

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், 
திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், 
உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து
 உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4

கடினமான சூழலை சந்திக்கும் எல்லோரது மனமும் பதறும்; 
பயத்தினால் கதறும். அந்நிலையில் மனம் பதறுகிறவர்களைப் பார்த்து 
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம். நாம் சொல்லும்
 சமாதான வார்த்தைகளே, அவர்தம் மனதிற்கு ஆறுதல்.

மனம் பதறுவோருக்கு மருந்திட மன்னவன் இயேசுவே ஒரே வழி! 
அந்த வழியை அவர்களுக்கு காண்பித்து கொடுப்பதே 
அவர்கள் வாழ்விற்கு நாம் செய்யும் அருந்தொண்டு!! 
பிரச்சனை தீர வழிகாட்டுவதே நமது வேலை, 
தீர்வு கொடுப்பதை ஆண்டவர் பார்த்துக்கொள்வார்.!!!

புகைப்படச்சான்று: Pinterest

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED