கழுகைப் போல . . .

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து,
கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; 
அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், 
நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
ஏசாயா40:31

முதிர்ச்சியால், வாழும் திடனற்றுப் போன கழுகு
உயர்ந்த மலையின் உச்சிக்குச்சென்று பாறையில் மோதி 
தன் அலகை உடைத்து, தன் செட்டைகளை தானே கொத்திப்பிடுங்கி பலமாதம்
 தனித்திருந்து, புதுப்பெலனடைந்து தன்னையே புதிப்பித்து கொள்ளுமாம்!
கழுகு தன் வலியை பார்த்தால் வாழ வழியேது?

நாம் நெருக்கப்படலாம், நொறுக்கப்படலாம், ஒதுக்கப்படலாம், 
செதுக்கப்படலாம். ஆனால், எந்நிலையிலும் புதுப்பெலனுக்காக
கர்த்தரிடம் காத்திருக்கவேண்டும் என்பதே கழுகிடம் நாம் கற்கும் பாடம்.
 நாம் மடிந்து வீழும் காக்கா கூட்டமல்ல, எழுந்து மேலே 
பறக்கவேண்டிய கழுகின் வம்சம் என்பதை நினைவில்கொள்வோம்.

புகைப்படச்சான்று : pxhere.com

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED