அணையாத தீபம்

அவர் நெரிந்த நாணலை முறியாமலும், 
மங்கியெரிகிற திரியை அணையாமலும்,
 நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
ஏசாயா 42:3

வளையாத உறுதியான பொருள் மீதே அதிக அடிவிழும்; 
அதுபோல உத்தமமாய் நடப்பவனுக்கே ஊரில் பல பிரச்சனை நேரிடும்.
இங்கு அறத்திற்கு அர்த்தம் மாறுவதால், பொய்யும் புரட்டும் புனிதம்
 போலாகிறது. இருட்டுதான் எங்கும் பிரகாசமாக தெரிகிறது.

நேர்மையாய் நடப்பவனுக்கு பாதையெல்லாம் பாடுகள் தான்; 
சூழல் கூட சூனியம் தான். ஆனாலும், தர்மமே வெல்லும்! 
உண்மையாக இருப்பவன், நெரிக்கப்பட்டாலும் முறிந்திடாமலும், 
அவன் ஒளி மங்கினாலும் அணைந்திடாமலும் காக்கப்படுவான். 
உத்தமனே என்றும் உயர்த்தப்படுவான்.





Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED