குகையிலோ, உலையிலோ . . .

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; 
நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; 
நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; 
அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
ஏசாயா 43 : 2

தானியேலும் அவனது சகாக்களும், ஆண்டவருக்கு முன்பாகவும்,
மனிதருக்கு முன்பாகவும் உண்மையாக நடந்தார்கள். 
ஆதலால், சிங்கத்தின் குகையிலோ, நெருப்பின் உலையிலோ எதில் 
அவர்களைப் போட்டாலும் அவர்களை ஒன்றும் சேதப்படுத்தவில்லை!

உண்மையும் உத்தமுமாய் வாழ்பவனுக்கு என்றும் கர்த்தர் துணை. 
அவனுக்கே, சோதனைகள் வரும், சோர்வுகளும் நிச்சயம் வரும். 
ஆனால், அத்தனையும் தேர்வுகள். ஆறுகளை கடப்பது ஆழம் அறியவும், 
அக்கினியில் எரிவது புடமிடப்படவுமே! காக்கும் கர்த்தர் கைவிடவே மாட்டார்!

புகைப்படச்சான்று :Pinterest

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED