பொழுதெல்லாம் !

நான் உனக்கு முன்னே போய், 
கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
ஏசாயா 45:2

பயணிக்கும் சாலையில்
பளிங்குத்தரையும் வரலாம், படுகுழியும் வரலாம்; 
நாணலை வளர்க்கும் நீருமுண்டு, கானல் நீருமுண்டு; 
வழிகள் சுமூகமாகவும் இருக்கும், சிக்கலிலும் தவிக்கும். 
நேரிடும் எல்லா சிக்கல்களையும் சீர்படுத்த,
 நம்மை சிருஷ்டித்த கர்த்தரால் மட்டுமே கூடும்!

நம்மைப் படைத்த கர்த்தரே, இமைப்பொழுதும் இடைவிடாமல் 
நம்மை காப்பவர், நம் அசைவும், இசைவும் அவரே முற்றும் அறிவார். 
அவர் ஒருவரே, துவக்கம் முதல் இறுதிவரை நம் நகர்விலெல்லாம் நமக்கு
 முன்சென்று கரடானதை சமமாகவும்,.கோணலானதை நேராகவுமாக்குவார்.

புகைப்படச்சான்று: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED