ஞானசேகரன்

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்,
 யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் 
ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய 
தேவனிடத்தில் கேட்கக்கடவன், 
அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
யாக்கோபு 1:5

தூக்கத்தை விட்டு 4 மணிக்கு எழுந்திருப்பவன் ஞானி, 
5 மணிக்கு எழுந்திருப்பவன் அறிஞன், 
6 மணிக்கு எழுந்திருப்பவன் அறிவாளி என்றொரு கூற்றுண்டு.
பொதுவாக ஞானிகள் சீக்கிரம் துயில் எழுவர்; 
ஆனால், சீக்கிரம் எழுவதால் மட்டும் ஞானம் பெற்றுவிடமுடியாது. 

நாம் யாவரும் நிறைவை விரும்பும் குறைவுள்ளவர்களே.
 நம் குறைவுகளை நிறைவாக்க, சம்பூரணமாக கொடுக்கிறவரும், 
கேட்கும் யாரிடமும் கோபப்படாத கருணைவாரியாம் கர்த்தரிடத்தில்
 சந்தேகமில்லாமல் விசுவாசத்தோடு கேட்போம்- பெற்றுக்கொள்வோம்.

புகைப்பட சான்று : pxhere.com

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED