அறப்பணி-அர்ப்பணி


(ஆசிரியர் நாளேட்டில் இது ஒரு மகத்தான மகிழ்நிறை நாள். ஆம், இந்நாள் ஆசிரியர் தின நாள். இந்தியாவை பொறுத்த மட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது கல்வி மற்றும் அதன் வளர்ச்சி மீது மட்டற்ற அக்கறைக் கொண்ட சிறந்த ஆசிரியரும், இந்திய திரு நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியுமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்.)

இந்த ஒரு நன்னாளில் தான், மாணவர்களின் சொல்லை 
ஆசிரியர்கள் கேட்பார்கள். ஆசிரியர்கள் பாடம் எடுக்க 
மாணவர்களின் அனுமதி மறுக்கப்படும் ! 
பாடம் எடுத்தவர்கள் எல்லாம் 
பாடல் பாடவும், பானை உடைக்கவும்,
 நடித்துக் காட்டவும், நாட்டியம் ஆடவும் , 
கேக் (CAKE) வெட்டவும், வெட்டிய கேக்கை ஊட்டவும் 
வகுப்பறையோ – மைதானமோ திருவிழா மயமாகிவிடும்.

தங்களை வளர்த்து விடும் வேர்களுக்கு விழுதுகளின் வாழ்த்து வெகுமதிகளும்,
 இந்த அரும்புகளின் அன்புப் பரிசும் ஆனந்தக் கூத்தும் இங்கு தான் அரங்கேறும். 
நன்றியுணர்வும் வாழ்த்துக்களும் இடத்துக்கு இடம் வடிவம் மாறுபடும்.

பொதுவாக ஆசிரியர்கள் அறிவைப் பகிர்வர், 
சிலரோ அன்னத்தையும் பகிர்வர். - மாணவர்கள்
சில ஆசிரியர்களைக் கண்டால் அருவியாய் ஓடி வருவதும்,
சிலரைக் கண்டால் குருவியாய் பறந்து விடுவதும் வாடிக்கையே.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் 
ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.

"ஆசிரியர் பணி உடல் உழைப்பல்ல; இறை அழைப்பே ! 
ஆசிரியர் பணி ஒரு அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி" 
என்பார் எனது பள்ளி ஆசிரியர் ஒருவர்.

சொந்த வாழ்க்கையின் சோர்வுகளும்
துன்பங்களும், தீரா துயரங்களும்
துண்டு துண்டாக வெட்டி வீசினாலும்
வகுப்பறையின் உள்ளே நுழைந்ததும்
முழு உருவம் பெற்று முழு மூச்சாக
சேவை செய்யும் நீங்களே எங்கள்
உரமும், வரமும், அறமும். . . !

உங்களுக்கோ  ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முறையும், 
பாடத் திட்டமும் மாறிக் கொண்டு தான் இருக்கிறது. 
ஆனாலும் , இரவெல்லாம் படித்து, உண்ணாமல் உறங்காமல் 
பல அவதாரங்களை எடுத்து, சொல்லி அலுத்து. . . . . 

காலாண்டுல, அரையாண்டுல தேரத் தவறிய தங்கங்களை, 
தரையில் உக்காரவைத்து, தானும் கூட அமர்ந்து, 
கனிவோடும், கரிசனையோடும் சொல்லிக் கொடுத்து, 
அந்த கடை குட்டி சிங்கங்களை கரையேத்தி விட 
கதறும் இதயங்களே ஈரம் மிகுந்தவை.

‘அ’ -ன்னா ‘ஆ’ -வன்னாவும், பெருக்கல் வாய்ப்பாடும், மனப்பாட செய்யுளும் . . . 
மரத்தடியில் உட்கார வைத்து கத்திக் கத்தி
 சொல்லிக் கொடுக்கும் குரல்களே
 உலகின் செல்லக்குரலும், சிம்மக்குரலும்.

அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் பணிமாறுதல் செய்யப்பட்டு, 
மாணவர்களின் அன்பினால் பணிமாறுதல் ரத்துசெய்யப்பட்டது.
புகைப்பட ஆதாரம் : The News Miunute

ஆசிரியர்கள் எல்லோரும் நல்லாசிரியர் விருது பெறுவதில்லை.
 நல்ல ஆசிகளை கூறும் நீங்கள் எல்லோருமே நல்லாசிரியரே.!

பள்ளி வளாகத்தில் வளர்க்கப்பட்ட மரத்தில்

"இலையைப் பறித்த மாணவனை அடிக்க
கிளையை ஒடித்து ஓடிய ஆசிரியர்."

இந்த புதுக்கவிதை ஒரு கேளிக்கை கவிதையாக இருந்தாலும்,
கருத்து செறிந்து ஆறாக ஓடுகிறது.

"சமூகத்தின் தலையெழுத்து ஒரு வகுப்பறையில் தான் வார்க்கப்படுகிறது"
 என அறிஞர்கள் பல பேர் கூறியக் கூற்றை தான் இங்கு நினைவு பதிக்கிறேன். 
ஆசிரியர்கள் மாணவரது வாழ்வில் பெரும் 
மாற்றத்தை உருவாக்கும் மகத்தான சக்தி படைத்தவர்கள்.

ஆகச் சிறந்த ஆசிரியர்களைக் கடந்து வந்திருப்போம். 
சிலரிடம் கற்றுக் கொள்கிறோம், சிலரிடம் பெற்றுக் கொள்கிறோம்.

 சாக்ரடீஸ் (Socrates), அரிஸ்டாட்டில் (Aristotle), பிளாட்டோ (Plato) 
போன்ற தத்துவ அறிஞர்கள், தத்துவங்களையும், 
மாற்றத்திற்கான சிந்தனைகளையும், புரட்சிகர கருத்துக்களையும் 
அள்ளி அள்ளிப் பருகக் கொடுத்தனர் !
புதிய புதிய வரலாறுகளைப் படைத்தனர் !!
அநேக ஆண்டுகளாக இந்த உலகிற்கு போதித்து வந்த 
இவர்களது கருத்துக்களால் சிலர் கவரப்பட்டார்கள், 
ஆயினும் இவர்களது கருத்துக்களிலும் 
அநேக முரண்பாடுகள் இருந்தன. 

நாம் அநேக ஆசிரியர்களை கடந்தபோதிலும் 
சிலரால் வெகுவாக கவரப்பட்டிருப்போம். 
என்னை அதிவெகுவாக கவர்ந்தவர், . . . 
என்னை மட்டுமல்ல மகாத்மா காந்தி,
 இன்றைய BIRTHDAY BABY, Dr . ராதாகிருஷ்ணன் . . . 
இப்படி எல்லாரையும் கவர்ந்திழுத்தவர் !
 21 நூற்றாண்டுகளை கடந்தபின்னரும், 
துளியும் முரண்படாத தெளிவான போதனையை 
இந்த உலகிற்கே தந்து சென்றவர்.



வெறும் மூன்றரை ஆண்டுகள் மட்டும் பொதுவாழ்வில் ஈடுபட்டும்,
 மக்களுக்கு தேவையான போதனைகள் செய்தும் , 
வாழ்க்கை நெறிகளை கற்பித்த, வாழ வழிகாட்டி சென்ற 
சிறந்த ஆசிரியர், ஒப்பற்ற நல்லாசிரியர் 
இயேசு கிறிஸ்து என்பவரே.

*#மத்திய ஆசியாவின் ஓர் குக்கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் தச்சரின் மகனாக பிறந்து, எவ்வித பின்புலமும் இல்லாமல், கல்லூரி காணாது, ஓர் புத்தகமும் எழுதாமல், தன் காலத்தில் கண் கவர் நகரம் ஏதேனும் கண்டிராமல், தான் பிறந்த ஊரை விட்டு இருநூறு மைல்கள் தாண்டாது, தன் வாயின் வார்த்தைகளால் பல்லாயிரங்களை கவர்ந்ததோடல்லாது, ஏற்றத் தாழ்வுகளை, பேதங்களை, பிரிவினைகளை எல்லாவற்றையும் வேரறுக்க வந்தார். அவர் வரலாறு நடத்தவில்லை, வரலாறு படைக்கவில்லை, வரலாற்றையே பிரித்தார். அவருக்கு முன் (கி.மு.), அவருக்கு பின் (கி.பி.) என பூச்சக்கரத்தை அவராலே நாம் அறிகிறோம். காலங்களை அவராலே கணிக்கிறோம்.*#

எல்லா நிலையினரும் இவரது குறையில்லாத 
நிறைவான போதனையை ஏற்கின்றனர். 
எல்லா குண நலன்களிலும், எல்லா பண்புகளிலும் 
சிறந்து விளங்க நற்காரியத்தை போதித்த 
'அவரே முன் மாதிரியாக வாழ்ந்தும் காண்பித்தார்'.

இத்தகு நல்லாசிரியர் இயேசு கிறிஸ்துவின் பெயராலே 
உங்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நாள்
 நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.!

இந்த நேரத்தில், என் கற்றலுக்கான பயணத்தில் பங்காற்றிய கரிவலம் வந்த நல்லூர் ஸ்ரீ மாதா பள்ளித் துவக்கி, நெடுகவே நான் பயின்ற நடுவக்குறிச்சி (சாயர்புரம்) R.C. நடுநிலைப்பள்ளி, கரிவலம் ஆ.ம.செ. அரசு மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி, திருச்சி தூய வளனார் கல்லூரி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி, பின் சிறிது காலம் பணியமர்ந்த திருச்சி-K.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, திருச்சி-செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, தற்பொழுது ஆய்வு படிப்பினை தொடரும் திருச்சி- பெரியார் ஈ.வெ .ரா. கல்லூரி என எல்லா கலை மனைகளுக்கும், என்னைக் கவர்ந்த, கற்பித்த எல்லா ஆசான்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

எனக்கு முத்தான முதல் ஆசிரியர்களான என் பெற்றோர்களுக்காய் எம் பெருமானை மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.


ஆசிரியர் அனைவரும் நலம் பெறுக!!

இணையற்ற ஆசிரியர் இயேசு போலாகுக!!!


(*#-என்ற பகுதி  SPEAKING TREE என்ற தளத்தின் https://www.speakingtree.in/blog/the-greatest-teacher-who-ever-lived  என்ற பதிவிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. 
இந்த பதிவிற்காக தனது பொன்னான நேரத்தை அதிகமாக செலவழித்த அண்ணன் SF அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. )


Comments

  1. Replies
    1. Thank you very much my dear son.l am so proud to remember you as my student. Wish you all the best . May the great teacher Jesus will guide you and lead you.

      Delete
    2. Teacher I am so grateful to you always; Because, You trained me in ALL Ways. Thank you for your kind words Teacher. Blessings Upon U

      Delete
  2. ஐயா தங்களின் வரிகள் மிகவும் அழகானது ஆசிரியர் அறிவு மட்டுமல்ல அன்னத்தையும் சேர்த்துக் கொடுப்பார் என்பதே நிதர்சனமான உண்மை என் வாழ்வில் மறக்க முடியாத ஆசிரியர்களே உங்கள் வரிகளால் ஞாபகப்படுத்தி மதிப்பு மிக்க மகிழ்ச்சி இன்னும் உங்களுடைய வார்த்தைகளால் எழுத்துக்களால் நிறைய உயரங்களைத் தொட என் அன்பின் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வார்த்தைகளுக்கு வாழ்த்துக்களும் வந்தனங்களும். உங்களது நினைவுகளை ஞாபக படுத்தியதற்காக மகிழ்கிறேன். இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete
  3. ஆசிரியர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு வணக்கங்கள் . இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete
  4. வாழ்த்துக்கள் mapla

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு வணக்கங்கள் . இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete
  5. I wish a happy Teachers day Anna🤩 and All other Teachers ☺️These lines are expressing our thoughts and memories 🧡😒Thanks alot for such a Wonderful words Sir!All the best😊Anna

    ReplyDelete
    Replies
    1. Very kind of You. Thank you for your kind words & your wishes. God Bless

      Delete
  6. Happy teacher's day and nice content sir

    ReplyDelete
    Replies
    1. Dear Guru,
      Thanks for Reading. Greetings and Wishes. Blessings Upon U

      Delete
  7. மிக அருமையான பதிவு.

    ஆசிரியர் தின நாளன்று நல்லாசிரியர் இயேசு கிறிஸ்து மிக அருமையான முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

    வாழ்த்துக்கள் ...

    இறையாசீர் கிட்டட்டும்...

    ��

    ReplyDelete
    Replies
    1. அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள். இறையாசீர் உங்களையும் நடத்தட்டும்.

      Delete
  8. சிறந்த பதிவுடா. உனது எழுத்து மகிழ்ச்சியை கொடுக்கிறது. வித்தியாசமான முறையில் எழுதப்பட்டிருக்கிறது. மலரும் நினைவுகளுக்கு மரியாதை கொடுக்கும் வரிகள் இவை.

    ReplyDelete
    Replies
    1. பதிவிற்கு உங்களது பதிலால் மகிழ்கிறேன். உள்ளத்தால் நன்றி நவில்கிறேன்.

      Delete
  9. One of the best articles one could ever write,wishes for your further moves,Have a good day and a pleasant future sir,Excellent sir.

    ReplyDelete
    Replies
    1. Dear Saie,
      Greetings and wishes! Thank You for Your Kind words and good motivation.
      God Bless.

      Delete
  10. Br. Great. Praise & Glory to God. I dont have any words to praise you. Because i could feel what you are today that only because of the creator. You are a blessed person with multi personality. Keep moving for the greater Glory of God Almighty. Congratulations... MAKE as many as students like you. May God Bless you & strengthen you to do your marvelous service.

    ReplyDelete
    Replies
    1. Dear Annan,
      Thank you annan for your gratitude. Your words are so Inspired. Your simplicity and dedication speaks more than your words. By God's grace, HE empowers me. Thank God for HIS mercy and grace on this occasion.

      Delete
  11. Good.. you improved your writing..keep it up..god bless you

    ReplyDelete
    Replies
    1. Thank God. Thank you for your kind words. Blessings Upon U

      Delete
  12. சிறந்த படைப்பு.
    நல்ல ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்ததுக்கள்.
    எல்லோரும் நல்லாசிரியர் இயேசு போல முன்மாதிரியாக இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களது புரிதலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED