யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும்,
பேசுகிறதற்குப் பொறுமையாயும்,
கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.
யாக்கோபு 1:19
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்" எனினும்
நாம் கேட்பதைவிட பேசுவதே அதிகம்.
அதிலும் குறுக்க குறுக்க பேசுவதே கூடுதல் சிறப்பு.
வார்த்தைகள் வளரும்போது யாரேனும் நமது பொறுமையை
சோதித்துவிட்டால் பொரிந்து தள்ளிவிடுகிறோம்.
உரையாடலின்போது பிறர் பேசுவதை கவனமாக கேட்டு,
யோசித்து பேசவேண்டும். கோபப்படுவது எளிது தான்;
ஆனால், விளைவோ விபரீதம். உடைந்த கண்ணாடி ஓட்டாதல்லவா!
இதெல்லாம் ஒருநாள் மாறுதல் அல்ல எனினும்,
இறைஉதவியோடு முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
புகைப்பட ஆதாரம் : Wallpaper Safari
Amen.......nice words👌👌👌
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteGod Bless
ReplyDeleteமனதில் பதியும் வண்ணம் மகத்தான எழுத்துக்கள்.
ReplyDeleteமனமார்ந்த நன்றி.
Delete